தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'5வது மாசம் நடக்குது... நாட்களை எண்ணிட்டு இருக்கிறோம்' - நடிகை சுஜா வருணி உருக்கம் - கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி, தான் கருத்தரித்திருப்பதை சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகை சுஜாவருணி

By

Published : Apr 8, 2019, 6:29 PM IST

தமிழ் சினிமாவில் டான்ஸராக அறிமுகமானவர் சுஜா வருணி. அடுத்து படங்களில் சிறு வேடங்களில் தலைக்காட்டினார். நீண்ட போரட்டத்திற்கு பிறகு மிளகா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். சினிமாவில் பெரிய முகவரி கிடைக்காமல் போராடி வந்தார். இந்நிலையில், கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் எண்ட்ரியானார் நடிகை சுஜா வருணி.

நிகழ்ச்சியில், தனது குடும்ப சூழ்நிலை, சினிமா போராட்டம், தந்தைக்காக ஏங்குவது, கமலை தந்தையாக நினைத்து தனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று உருகியது என பெண்களை தன்பக்கம் ஈர்த்தார். நிகழ்ச்சி முடிந்த வெளியே வந்த அவர், தமிழ் சினிமாவில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் பேரனை காதலிப்பதாக கிசு கிசு எழுந்தது. ஒரு கட்டத்தில் அந்த கிசு கிசு உண்மையாகவும் மாறியது.

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் சிவக்குமாரை, தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளேன் என்று அதிரடியாக அறிவித்தார். அதன் பின்னர், கடந்த நவம்பரில், நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் சிவக்குமாரை அவர் மணந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கொடுத்த வாக்குறுதியின்படி, சுஜா – சிவக்குமார் இருவரையும் அழைத்து பிரியாணி விருந்து வைத்து வாழ்த்தி அனுப்பினார் கமல்.

இந்நிலையில் சுஜா கர்ப்பமாகியிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சிவா, தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, குழந்தையின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

”சிவாவுக்கு அவங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும், அதனால அவங்க அம்மாவே மறுபிறவி எடுத்து குழந்தையாக போறாங்கன்னு ரொம்ப எமோஷனல் ஆகிட்டார். இப்போ அஞ்சாவது மாசம் நடக்குது. நாட்கள ரெண்டு பேரும் எண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் புன்னகையுடன் சுஜா வருணி.

ABOUT THE AUTHOR

...view details