இந்திய சுதந்திர தினத்தன்று தனது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் பிரபல 80களின் நாயகியும், இயக்குநர் மணிரத்னத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி மணிரத்னம். அவர் குறித்த சுவாரசியத் தொகுப்பைக் காணலாம்.
இயக்குநர் மகேந்திரனால் அறிமுகம்
பன்முகத் திறமை கொண்ட சுஹாசினியின் சொந்த ஊர் பரமக்குடி. நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுஹாசினி, தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் மூலமாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
’நெஞ்சத்தைக் கிள்ளாதே’சுஹாசினி மகேந்திரன் இயக்கத்தில் மோகன், பிரதாப் போத்தனுடன் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் அறிமுகமானார் சுஹாசினி. ஆனால் அதற்கு முன்னதாகவே அதே மகேந்திரனின் தமிழ் சினிமா கொண்டாடும் ’உதிரிப் பூக்கள்’, ’ஜானி’ ஆகிய படங்களில் லைட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
முதல் படத்திலேயே மாநில அரசின் விருது பெற்றார் சுஹாசினி. தொடர்ந்து பாலைவனச்சோலை, ஆகாய கங்கை என தேர்தெடுத்த படங்களில் நடித்து வந்த சுஹாசினிக்கு தேசிய விருதைப் பெற்று தந்தார் ’இயக்குநர் இமயம்’.
தேசிய விருது
பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சிந்து பைரவி படத்திற்கான 1986ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் சுஹாசினி.
அதன் பின் ’சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் ’தர்மத்தின் தலைவன்’, பெண்ணியம் பேசிய ’மனதில் உறுதி வேண்டும்’, ’அருக்காணி’ கதாபாத்திரத்தில் அவர் நடித்த ’கோபுரங்கள் சாய்வதில்லை’, ’பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ ஆகிய படங்கள், மக்களிடம் அவரை இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சுஹாசினி.
பாடகர் எஸ்பிபி உடன் மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினி மணிரத்னத்துடன் திருமணம்
1988ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தை மணந்து கொண்ட சுஹாசினி, அதன் பின் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பைக் கடந்து, தன் தங்களை அனு ஹாசன், நடிகர் அரவிந்த் சாமி நடித்த இந்திரா படத்தை இயக்கியுள்ளார்.
தனது கணவர் மணிரத்னத்தின் 'ராவணன்’ படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக தன் சித்தப்பா கமல்ஹாசனின் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தேர்தல் பரப்புரையில் தீவிரமாகப் பணியாற்றினார் சுஹாசினி.
அக்ஷரா ஹாசனுடன் தேர்தல் பிரச்சாரத்தின்போது தற்போது கல்கியின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்கி வருகிறார். தன் கணவர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளில் சுஹாசினி ஈடுபட்டு வருகிறார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுஹாசினிக்கு ஈ டிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்.
இதையும் படிங்க:ஆக்ஷன் கிங் அர்ஜுன் பிறந்தநாள்: வாய்ப்புகளை தனதாக்கி வெற்றி பெற்ற ’முதல்வன்’!