மலையாள திரைப்பட துறையில் எடிட்டராக கால் பதித்த ஷாநவாஸ் சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக 'கரி' என்ற படத்தை இயக்கினார். பின்னர் இவர் இயக்கிய ‘சூபியும் சுஜாதையும்’ படமானது கரோனாவால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இயக்குநர் ஷாநவாஸ் அவரது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் இருந்த போது, கடந்த சனிக்கிழமை (டிச. 19) இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவையில் உள்ள கேஜி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவந்தது.