நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக பெரிய திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறை தினக்கூலித் தொழிலாளர்கள் பலரும் வறுமையில் சிக்கி உள்ளனர்.
மீனு. மீனு.. கரோனா முடக்கத்தால் மீன்வியாபாரி ஆன மலையாள நடிகர்! - Mollywood news
கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்தான நிலையில், மலையாள நடிகரான சுதீஷ் அன்சேரி மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
Sudheesh Ancherry
மேலும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாட்டுப்புற பாடகரும் மிமிக்ரி கலைஞருமான மலையாள நடிகர் சுதீஷ் அன்சேரி, தனது வாழ்வாதாரத்தைப் பேணும் வகையில் மீன் விற்கும் தொழில் செய்து வருகிறார்.
அவர் மீன் வியாபாரம் செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.