தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மோடியிடம் கோரிக்கை வைத்த நடிகை சுதா சந்திரன்! - மோடியிடம் கோரிக்கை வைத்த நடிகை சுதா சந்திரன்

விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பிரதமர் மோடியிடம் நடிகை சுதா சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

sudha
sudha

By

Published : Oct 22, 2021, 5:50 PM IST

Updated : Oct 23, 2021, 7:57 AM IST

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981 ஆம் ஆண்டு திருச்சி அருகே விபத்தில் சிக்கினார். இதனால், அவரது வலது காலில் பாதி நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்றுவரைக்கும் தமிழ், இந்தி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘நாகினி’ தொடர் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில். ” விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக எனது செயற்கை காலை அலுவலர்களால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது.

மோடியிடம் கோரிக்கை வைத்த நடிகை சுதா சந்திரன்

ஒவ்வொரு முறையும் செயற்கைக் கால்-ஐ அகற்றுவது வாட்டி வதைத்து வலியைக் எனக்குக் கொடுக்கிறது. எனது செயற்கை காலுடன் பல நாடுகளிலும் நடனமாடி இந்திய நாட்டை பெருமைப்படுத்துகிறேன். ஆனால், விமான நிலைய அலுவலர்களிடம் செயற்கை காலை சோதனைக்காகக் காட்டவேண்டியிருக்கிறது.

வயதானவர்களுக்கு இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள். எனது செய்தி மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்குச் சென்றடையும் என்று நம்புகிறேன் என்று சுதா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த காணொளியைப் பார்த்த விமானநிலையம் பாதுகாப்பு (CISF) அலுவலர்கள் சுதா சந்திரனிடம் விளக்கம் அளித்ததுடன் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கும் 'காதலிக்க நேரமில்லை' சந்திரா லக்‌ஷமண்

Last Updated : Oct 23, 2021, 7:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details