தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூரரைப் போற்று - இறுதிச்சுற்று ஹைதராபாத்தில்...! - Soorarai pottru mp3 songs

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Soorarai pottru

By

Published : Sep 25, 2019, 1:27 PM IST

’இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெகான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுவருகிறது.

இதனை சூர்யாவும் குனீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சூர்யா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Surya and mohan babu

இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் டோலிவுட் சீனியர் ஸ்டார் மோகன் பாபு நடிக்கவுள்ளார். இதற்காக படக்குழுவினர் ஹைதராபாத் வந்துள்ளனர். மோகன் பாபுவுடன் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தமிழ்த் திரையுலகைக் காத்த பொன்மனச் செல்வன்

ABOUT THE AUTHOR

...view details