ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பு, ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் 'நான் ஈ' சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு - சுதீப் கூட்டணி; இது எப்படி இருக்கு? - maanadu teaser
சிம்புவின் 'மாநாடு’ படத்தில் வில்லனாக நடிக்க ' நான் ஈ' சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sudeep plays antagonist role in simbu's maanadu
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியைதான் 'மாநாடு' படக்குழு அணுகியுள்ளது. ஆனால் 'தலைவி' படத்தின் கமிட்மென்ட்டால் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம், அரவிந்த் சாமி. எனவே ‘நான் ஈ’ சுதீப்பை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ‘தபாங் 3’ படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப், அதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: உடைந்தது இதயகோயில்... உதிர்ந்தது ரோஜா- முறிந்த மணிரத்னம், வைரமுத்து கூட்டணி!