'என்னையறிந்தால்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு அருண்விஜய்யின் மார்கெட் உயர்ந்தது. தொடர்ந்து 'குற்றம் 23', 'தடம்' போன்ற வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். ஜூலை 2ஆம் தேதி கார்த்திக் லைக்கா தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஃபியா' படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
அருண் விஜய்க்கு தெரியாமல் வெளியான 'பாக்ஸ்சர்' பஸ்ட் லுக் - ritika singh
விவேக் இயக்கத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் 'பாக்ஸ்சர்' திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நேற்று திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருண் விஜய், ரித்திக் சிங் நடிப்பில் உருவாகி வரும் 'பாக்ஸ்சர்' திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்றிரவு திடீரென்று வெளியிடப்பட்டது. எந்தவொரு அறிவிப்புமின்றி திடீரென்று ஃபஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அருண் விஜய் நேற்று நள்ளிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், திடீரென்று ஃபஸ்ட் லுக் வெளியானதில் தானும் அதிர்ச்சியடைந்ததாகவும், ஃபஸட் லுக் போஸ்டர் திருட்டுத்தனமாக நேற்று மாலையே இணையதளத்தில் வெளியானதால் வேறு வழியின்றி அவசர அவசரமாக வெளியிடப்பட்டதாகவும விளக்கமளித்துள்ளார்.