'தார்', 'பசிஃபிக் ரிம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இட்ரிஸ் எல்பா. ஹாலிவுட்டில் இருக்கும் கருப்பின நடிகர்களில் மிகப் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து, கருப்பின மக்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதி குறித்து பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் எல்பா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "வெள்ளை நிறத்தவர்களை விட இரண்டு மடங்கு சிறப்பாக செயல்பட்டால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சொல்லியே நான் வளர்க்கப்பட்டேன்.
நான் வெற்றி பெற்றதால் இனவெறிக்கு ஆளாகாமல் இருந்ததாக அர்த்தமில்லை. இனவெறி பற்றி என்னிடம் கேட்பது, எவ்வளவு நாட்களாக மூச்சு விடுகிறீர்கள் என்று கேட்பது போன்றது.
கறுப்பின மக்கள் தங்கள் தோலின் நிறம் குறித்து உணர்வதே இனவெறியின் போதுதான். அந்த எண்ணம், நீங்கள் வெற்றி பெற்றாலும் மேலே உயர்ந்தாலும் இன்வெறி உங்கள் கூடவேதான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்றாலும், உயரே சென்றாலும் இனவெறி உங்களுடனேயே இருக்கும் - இட்ரிஸ் எல்பா - இட்ரிஸ் எல்பா
வெள்ளை நிறத்தவர்களைவிட இரண்டு மடங்கு சிறப்பாக செயல்பட்டால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சொல்லியே தான் வளர்க்கப்பட்டதாக ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தெரிவித்துள்ளார்.
இட்ரிஸ் எல்பா