தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படப்பிடிப்பில் விபத்து - வின் டீசல் கண்ணீர் - வின் டீசல் கண்ணீர்

ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் படுகாயமடைந்ததால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

vin diesel

By

Published : Jul 24, 2019, 7:28 AM IST

Updated : Jul 24, 2019, 9:48 AM IST

உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாம் பாகத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு லீவ்ஸ்டென்னில் உள்ள வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அங்கு சென்ற படத்தின் முக்கிய நாயகனான வின் டீசல், அந்தக் ஸ்டண்ட் கலைஞரை கண்டு கண் கலங்கினார்.

பின்னர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட படப்பிடிப்பானது இன்று மீண்டும் தொடங்கியது. இத்திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 24, 2019, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details