தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புலிக்கு பெயிண்ட் அடிக்கும் டீமை சந்திக்க அற்புத வாய்ப்பு! - அனிருத்

'தும்பா' திரைப்படக் குழுவினரை ரசிகர்கள் சந்திக்கும் விதமாக ட்விட்டரில் ஒரு போட்டியை நடத்த படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளனர்.

Poster

By

Published : May 6, 2019, 3:07 PM IST

அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் `கனா' தர்ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர, `கலக்கப்போவது யாரு' தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர். இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

`தும்பா' என்ற பெண் புலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படம் மே 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் 'ஜிலே பாரா வித் தும்பா' என்ற ஹேஷ்டேக்கை படக்குழு தற்போது ட்விட்டரில் உருவாக்கியுள்ளது. இதில் 'ஜிலே பாரா... ஜிலே பாரா' பாடலுக்கு ஆர்வமுள்ள இணையவாசிகள் நடனமாடி அந்த ஹேஷ்டேக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

#JilebaraWithThumbaa

இதில் வெற்றிபெறும் மூன்று அதிர்ஷ்டசாலிகள் தும்பா படக்குழுவினரை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details