தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியாகிறது ’ராக்கி IV’ டைரக்டர் கட்! - சில்வஸ்டர் ஸ்டோலன் படங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஹாலிவுட் அதிரடி நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனின் ’ராக்கி IV’ திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் 'இயக்குநர் கட்' காட்சிகளை வெளியிடுவதாக ஸ்டாலோன் அறிவித்துள்ளார்.

சில்வஸ்டர் ஸ்டோலன்
சில்வஸ்டர் ஸ்டோலன்

By

Published : Sep 1, 2020, 4:52 PM IST

சில்வஸ்டர் ஸ்டாலோன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அவரது இரண்டு பிரபல கதாபாத்திரங்களான ரேம்போ, ராக்கி ஆகியவை தான். இதில் குத்துச்சண்டை வீரராக அவர் தோன்றிய ’ராக்கி பால்போவா’ கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கதாபாத்திரம் இடம்பெற்ற பிரபல ராக்கி சீரிஸின் முதம் திரைப்படம், 1976ஆம் ஆண்டு வெளியானது.

மொத்தம் ஆறு திரைப்படங்களைக் கொண்ட இந்த ’ராக்கி சீரிஸ்’ வசூலிலும் இன்றளவும் பெரும் சாதனைப் படைத்த திரைப்படங்களின் வரிசையில் முன்னணியில் உள்ளது.

இதில் குறிப்பாக ,'ராக்கி IV' நவம்பர் 21, 1985 அன்று வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி தற்போது 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக இப்படம் குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிடவுள்ளதாக, சில்வஸ்டர் ஸ்டாலோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலோன் கூறுகையில், ”ராக்கி IV திரைப்படத்தின் 35ஆவது ஆண்டு விழா நிறைவை ஒட்டி அதன் 'டைரக்டர் கட்' வெளியிடப்பட உள்ளது. இது மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details