இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை புரிந்த 'பாகுபலி' சீரிஸ் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜூலை மாதம் இறுதியில் ராஜமெளலி, அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ராஜமெளலி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக்கொண்டார். இதிலிருந்து மீண்டு வந்த பிறகு பிளாஸ்மா தானம் செய்வேன் எனக் கூறியிருந்தார்.