சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலின் மூத்த மகள் . இவர் பாடிய ஏலேலம்மா, கண்ணழகா உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் திரைத்துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் இன்று (ஜன.28) தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் காதலருடன் மும்பையில் வசித்துவரும் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.