புளூவேல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் சினிமா நன்றாக இருக்கிறது என்று அனைவரும் ஆதங்கப்படுகிறார்கள். இங்கு, நடிகர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை, எப்பொழுது நம் வீட்டுக்குள் ஒற்றுமை இல்லையோ அடுத்தவர்கள் நம்மை வேடிக்கை பார்க்க தான் செய்வார்கள். முதலில் நம் பிரச்னைகளை நாம் சரி செய்தாக வேண்டும். அடுத்தவர்களை பார்த்து ஆதங்கப்படுவதில் பிரயோஜனமில்லை.
‘பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்காதீர்கள்’ - நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு
சென்னை: ‘தமிழ் சினிமாவில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆகவே, பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்காதீர்கள்’ என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணாதீர்கள். கதையை நம்பி படம் எடுங்கள். இங்கு சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. சங்கப் பதவிக்கு வருபவர்கள் சுயநலமில்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பதவிக்கு வருபவர்கள் எல்லாம் சுயநலத்தோடு வருகின்றனர். பின்னர் பிரச்னைகளை எப்படி சரி செய்ய முடியும். சுயநலம் இல்லாதவர்கள் பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும்.
ஆந்திராவில் பொழுதுபோக்கு இல்லை. அதனால் சினிமாவை மிகச் சிறந்த பொழுதுபோக்காக எண்ணி கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பொழுது போக்குவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதனால் சினிமாவை ஆரோக்கியமானதாக நம் கொடுத்தால்தான் மக்கள் படங்களைப் பார்க்க வருவார்கள்’ என்றார்.