ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ், ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்நிலையில் 'தி பெட்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் (பிப்.7) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
அப்போது ஸ்ரீகாந்த் பேசுகையில், “முதலில் டைட்டிலை கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது. எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஹேட்ஸ் ஆஃப் சிம்பு. யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.
அவர் ஒரு அற்புதமான மனிதர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரிடம் தன்னை மொத்தமாக ஒப்படைத்து விடுவார். சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ளமாட்டார். 'தி பெட்' என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும்.