தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரீமேக்கான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல்: வெளியான 'ருத்ரன்' அப்டேட் - ருத்ரன் படப்பாடல்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ருத்ரன்” படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்படவுள்ளது.

Rudhran
Rudhran

By

Published : Oct 19, 2021, 4:24 PM IST

’பொல்லாதவன்’ படத் தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், 'ருத்ரன்'. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் இதில், அவருக்கு ஜோடியாக முதன்முறையாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், நாசர் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டான ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ருத்ரன்' படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குநராக ஸ்ரீரீதர் பணியாற்றியுள்ளார். 'ருத்ரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:பிரியா பவானி சங்கருக்குப் பிறந்தநாள் பரிசு கொடுத்த லாரன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details