தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலக்கனம் இல்லாதவர் தல அஜித்' - நடிகை ஸ்ரீ ரெட்டி! - முகநூல்

நடிகை ஸ்ரீ ரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தல அஜித் தலக்கனம் இல்லாதவர் என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி

By

Published : Mar 20, 2019, 10:36 PM IST

Updated : Mar 21, 2019, 12:14 PM IST

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு திரை உலகில் உள்ள பிரபலமான, புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் கோலிவுட் நடிகர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, சென்னையில் வசித்துவரும் ஸ்ரீரெட்டி, தற்போது தல அஜித்தை பற்றி தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், "நடிகர் அஜித் யாருக்கும் தெரியாமல் நிறைய பண உதவிகளை செய்துவருகிறார். தினந்தோறும் நான் அவரது படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தூக்கம் வரவில்லை. அவர் தமிழ்நாட்டில் பெரிய நடிகராக இருந்தாலும் தான் பிரபலமாக இருப்பதை விரும்பாதவர். எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் விலகிச் செல்வது மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் மென்மையானவராக காட்சியளிப்பதால்தான் ரசிகர்கள் அவர் மீது அதிக பாசம் வைத்துள்ளனர்.

மனைவிக்கு நல்ல கணவனாகவும் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கிறார். அவர் தலைக்கனத்துடன் இல்லாததால் எல்லோரும் நேசிக்கும் 'தல'யாக இருக்கிறார்" என்று அஜித்தை புகழ்ந்து ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

Last Updated : Mar 21, 2019, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details