’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்திற்குப் பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா நடிப்பிற்கு மூன்று வருடங்கள் இடைவெளி கொடுத்திருந்தார். இதையடுத்து அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ’ஒத்தைக்கு ஒத்த’ படம் மூலம் கம்-பேக் கொடுக்கிறார்.
இதற்கிடையில் தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் ஸ்ரீ திவ்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அதிரடி கலந்த ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஸ்ரீதிவ்யா இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவராக நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பாலா சரவணன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.