நடிகை ஸ்ரீதிவ்யா 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் சிவகார்த்தியேனுடன் மீண்டும் இணைந்து 'காக்கி சட்டை', விஷ்ணு விஷாலுடன் 'ஜீவா', 'மாவீரன் கிட்டு' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மலையாளத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதிவ்யா! - ப்ரித்விராஜ் படங்கள்
நடிகை ஸ்ரீதிவ்யா ப்ரித்விராஜ் உடன் நடிக்கும் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் கால் பதிக்கிறார்.
sridivya
அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகிறார். ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகும் 'ஜனகனமன' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்த தகவலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.