நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான கொரியன் வெப் சீரிஸ் 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளாக வெளியானது.
இந்த வெப் சீரிஸ் வெளியான 17 நாள்களில் 111 மில்லியன் பார்வையாளர்கள், இந்தத் தொடரைப் பார்த்து ரசித்தனர். இதனால் 'ஸ்குவிட் கேம்' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் தொடராக மாறியது.
ஸ்குவிட் கேம் தொடரின் முதல் விளையாட்டான ரெட் லைட்... கீரின் லைட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காரணம், அதில் ராட்சத பொம்மை. 'ரெட் லைட்' என அந்த பொம்மை கூறிய பின் போட்டியாளர்களிடம் அசைவு தெரிந்தால் அது அவர்களை சுட்டு வீழ்த்தும்.
இதற்கு முன்னதாக 'ப்ரிட்ஜெர்டன்' (Bridgerton) தொடர் குறுகிய நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராக முதலிடத்தை வகித்து வந்தது. 'ஸ்குவிட் கேம்' தொடரின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
'ஸ்குவிட் கேம்' தொடரின் நடிகர்கள் லீ ஜங்-ஜே, பார்க் ஹே-சூ, லீ ஜங்-ஜே, இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹியூக் ஆகியோர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர்