தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் மகளை கைது செய்த காவல்துறையினர் - ஸ்டீவன் ஸ்பில்பேர்க் படங்கள்

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மகள் மீது வன்முறை குற்றம்சாட்டப்பட்டு, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Steven Spielberg
Steven Spielberg

By

Published : Mar 1, 2020, 3:51 PM IST

ஈடி (ET), ஜுராஸிக் பார்க், கேட்ச் மீ இஃப் யூ கேன் உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவரது படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்துள்ளன.

சமீபத்தில் இவர் மகள் மைக்கேலா அடல்ட் படங்களான பார்ன் படத்தை தயாரித்து நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து, மைக்கேலாவை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாஷாவில் வசித்து வந்த மைக்கேலா, தனது வீட்டில் உள்ள ஒருவரை தாக்கியுள்ளதாகக் கூறி காவல் துறையினருக்கு புகார் கிடைத்துள்ளது. இந்த புகாரின் பெயரில், மைக்கேலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் ஒரு தவறான புரிதலுடன் நடந்தது என்றும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கைது செய்யப்பட்ட மைக்கேலாவை 12 மணி நேரத்துக்கு பிறகு நண்பர் ஒருவர் ஆயிரம் டாலர் செலுத்தி அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details