தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மோடியுடன் நீங்க மட்டும் எப்படி செல்பி எடுதீங்க? எஸ்.பி.பி. ஆச்சரியம்! - SPB Modi

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாடத்திற்காக பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில் தான் பங்கேற்ற சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

SPB

By

Published : Nov 2, 2019, 11:55 PM IST

காந்தியின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் அவருக்கு பிடித்தமான வைஷ்ணவ் ஜன தோ பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களைக் கொண்டு உருவாக்கியது. இப்பாடலை கடந்த மாதம் 29ஆம் தேதி (அக்.29) டெல்லியில் தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருகான், ஆமிர்கான் தொடங்கி இந்தியாவின் திரை நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனுபவம் குறித்து எஸ்.பி.பி. இன்று தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடனும், சுவரஸ்யத்துடனும் பகிர்ந்துகொண்டார்.

பிரதமரின் விழாவில் தான் பங்கேற்பதற்கு காரணமாக இருந்த ஈனாடு நிறுவனத்தின் தலைவர் ராமோஜிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய எஸ்.பி.பி., அத்துடன் அங்கு அரங்கேறிய சுவரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் செல்பி எடுக்க அவர்களுக்கு எப்படி கைபேசி கிடைத்தது என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்.பி.பி. முகநூல் பதிவு
இது குறித்து தனது முகநூலில், "பிரதமரின் இல்லத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் கைபேசியை வாங்கிக்கொண்டு அதற்கான டோக்கனை தந்தனர். அப்படியிருக்க, பிரதமரைப் பார்த்தவுடன் அவருடன் செல்பி எடுக்க பாலிவுட் பிரபலங்களுக்கு எப்படி கைபேசி கிடைத்தது?" என்று சந்தேகத்துடன் கிண்டலாக பதிவிட்டுள்ளார் எஸ்.பி.பி..பாடகராக மட்டுமில்லாமல் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சுவரஸ்சியமாகப் பேசி பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதில் வல்லவர் எஸ்பிபி. இந்த முகநூல் பதிவின் மூலம் அதை மீண்டும் நிருபித்துள்ளார் பாடும் நிலா பாலு.

ABOUT THE AUTHOR

...view details