தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடல்நிலையில் முன்னேற்றம்... எழுந்து உட்கார்ந்தார் எஸ்பிபி - சரண் வெளியிட்ட தகவல் - SPBCharan latest tweet

மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் அப்பாவால் உட்கார முடிகிறது என எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

SP
SP

By

Published : Sep 14, 2020, 7:34 PM IST

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், " கடைசியாக 10ஆம் தேதி உங்களுக்கு அப்டேட் கொடுத்திருந்தேன். இந்த நான்கு நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் அப்பாவால் உட்கார முடிகிறது. வாய் வழியாக சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தொடர்கிறது. உங்கள் அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பிசியோதெரபி சிகிச்சைக்கு எஸ்பிபி முழுமையான ஒத்துழைப்பு தருகிறார் - மருத்துவமனை தகவல்

ABOUT THE AUTHOR

...view details