தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் அவதாரமெடுக்கும் எஸ்.பி.பி. சரண் - எஸ்.பி.பி. சரண் இயக்கும் அதிகாரம் வெப் சீரிஸ்

பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் 'அதிகாரம்' என்ற புதிய இணைய தொடரை இயக்கவுள்ளார்.

SPB charan
SPB charan

By

Published : Jan 9, 2020, 2:14 PM IST

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் பாடகருமான எஸ்.பி. சரண் தனது கேப்பிடல் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை 600028, ஆரண்யகாண்டம், சென்னை 600028 IInd இன்னிங்ஸ் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார்.

பாய்ஸ், அலைபாயுதே, வாரணம் ஆயிரம், ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ள எஸ்.பி. சரண் தற்போது அதிகாரம் என்ற புதிய இணைய தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அதிகாரம் பட அறிமுக விழாவில் படக்குழுவினர்

கேப்பிடல் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி. சரண் தயாரித்து இயக்கும் இந்த இணைய தொடரில் அதுல்யா ரவி, நேர்கொண்ட பார்வை பட நடிகை அபிராமி வெங்கடாசலம், வெள்ளைப் பூக்கள் தேவ், இளவரசு, ஏ.எல். அழகப்பன், ஜான் விஜய், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிகாரம் படக்குழு

இதற்கான படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் எனப் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க...

மாதவனின் 'மாறா' படத்தில் இணைந்த 'நெடுஞ்சாலை' நடிகை

ABOUT THE AUTHOR

...view details