தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாட்டுப் பாடும் வானம்பாடி நாம்தான்..!' - கைகோர்த்த எஸ்.பி.பி - இளையராஜா! - isai kondadum isai

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் ஒரே இசைமேடையில் கச்சேரி செய்யவுள்ளனர்.

Ilayaraja - spb

By

Published : May 27, 2019, 5:39 PM IST

இசைஞானி இளையராஜாவும் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியமும் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படப் பாடல் காப்புரிமைப் பிரச்சனையால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர். வரும் ஜூன் 2ஆம் தேதி இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "இசை கொண்டாடும் இசை" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த கச்சேரி, சென்னையில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ என இளையராஜாவுடன் பணியாற்றிய பல்வேறு இசைக் கலைஞர்கள் மற்றும் பின்னணிப் பாடகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இளையராஜா - எஸ்.பி.பி

இந்நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று இசைஞானி இளையராஜாவை சந்தித்தார். நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக இன்று இசைக் கச்சேரி ஒத்திகை சென்னையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில் எஸ்.பி.பி கலந்துகொண்டார். நீண்ட நாளுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதால், ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள். பின்னர் நீண்டநேரம் உரையாடினர்.

எஸ்.பி.பி - இளையராஜா ஒத்திகையில்

ABOUT THE AUTHOR

...view details