தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

“மயக்க நிலையிலிருந்து 90 விழுக்காடு மீண்ட எஸ்.பி.பி.” - சரண் - எஸ் பி சரண் காணொலி

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து 90 விழுக்காடு மீண்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

எஸ் பி சரண் காணொலி பதிவு
எஸ் பி சரண் காணொலி பதிவு

By

Published : Aug 25, 2020, 5:24 PM IST

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

கடந்த சில நாள்களாக ஆபத்தான கட்டத்தில் இருந்த அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துவருகிறது.

இது குறித்து அவரது மகன் எஸ்.பி. சரண் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் சரண் பேசுகையில், 'எஸ்.பி.பிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தொடர்புக்கொண்டு பேசினேன்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. 90 விழுக்காடு மயக்கத்திலிருந்து அவர் மீண்டுள்ளார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைய பிரார்தித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ் பி சரண் காணொலி பதிவு

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'அண்டாவ காணோம்' திரைப்படம் வெளியிட இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details