நடிகர் கார்த்தியின் கைதி படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இதற்கு முன் வெளிவந்த தேவ் படம் பெரிய அளவில் வெற்றியடையாததால், தற்போது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பழம்பெரும் நடிகையுடன் இணைந்த கார்த்தி...! - சௌகார் ஜானகி
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிகர் கார்த்தி, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
நடிகர் கார்த்தி, நடிகை சௌகார் ஜானகி இருவரும் இணைந்து நடிக்கின்றார்கள்
இந்நிலையில் நடிகர் கார்த்தி, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இருவரும் பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆவார். இதன் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது. இதில் நிகிலா விமல் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
87 வயதாகும் நடிகை சௌகார் ஜானகி, 2016 -ல் பாபு பங்காரம் என்ற படத்திற்கு பிறகு தற்போது நடிக்கிறார்.