தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சந்தானம் படத்தில் இணைந்த செளகார் ஜானகி - இது அவருக்கு எத்தனையாவது படம் தெரியுமா! - வித்தைக்காரன் சவுகார் ஜானகி

சந்தானத்தின் நடிப்பில் உருவாகி வரும் 'வித்தைக்காரன்' படத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Sowcar Janaki

By

Published : Oct 21, 2019, 8:27 AM IST

'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்டப் படங்களை இயக்கிய கண்ணன், சந்தானத்தை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு 'வித்தைக்காரன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்டாக இத்திரைப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி, பரபரப்பாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் அவரின் 400ஆவது படமாகும்.

இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' படத்திலும் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாது சந்தானம் தன்னுடைய 'டகால்டி' , 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:வித்தைக்காரன்: ஸ்டண்ட் சில்வாவிடம் சிலம்பம் கற்கும் காமெடி நடிகர்!

ABOUT THE AUTHOR

...view details