தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல பாப் பாடகி திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்! - தென்கொரிய பாப் பாடகி ஹாரா

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஹாரா மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார்.

goohara
goohara

By

Published : Nov 26, 2019, 5:52 PM IST

2008ஆம் ஆண்டு முதல் பாப் பாடகி ஹாரா தொலைக்காட்சி நடிகையாகவும் பாப் பாடகாரவும் இருந்து வந்தார். இவரின் பாப் பாடல்கள் உலகப்புகழ் பெற்றவை. இதனால் தென்கொரியாவில் பிரபலமாக வலம்வந்துகொண்டிருந்தார்.

இதனயைடுத்து நேற்று ஹாராவின் வீட்டில் இருந்து அவரை சடலமாக காவல் துறையினர் மீட்டுள்ளனர். இவரது மரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தென்கொரிய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் ஹாரா தற்கொலைக்கு முயற்சித்தார். பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார். அதன்பின் ரசிகர்களைச் சந்தித்த அவர் உங்களுக்காக மீண்டும் பாடுவேன் என்று தெரிவித்தார். தற்போது வீட்டில் மர்மமான முறையில் ஹாரா இறந்து கிடைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details