தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீவிர சிகிச்சையில் நயன்தாராவின் தந்தை! - நயன்தாராவின் தந்தை

கொச்சி: நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவு காரணாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Nayanthara
Nayanthara

By

Published : Jul 10, 2021, 8:31 AM IST

தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி தனி விமானம் மூலம் கொச்சியில் உள்ள தனது பெற்றோரை பார்த்து வருகிறார். இந்நிலையில், நயன்தாராவின் தந்தை குரியன் உடல்நிலை பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குடும்பத்தினருடன் நயன்தாரா

நயன்தாராவும் அவரது தாயார் ஓமனா குரியனும் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர். துபாயில் இருக்கும் நயன்தாராவின் சகோதரர் லெனோவுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நயன்தாராவின் தந்தை விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா

ABOUT THE AUTHOR

...view details