தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் விவேக் மறைவு: தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இரங்கல் - நடிகர் விவேக் இறப்பு

நடிகர் விவேக் மறைவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

vivek
vivek

By

Published : Apr 17, 2021, 12:43 PM IST

'ஜனங்களின் கலைஞன்' எனப் போற்றப்படும் நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விவேக்கின் மரணத்திற்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. வேதனையை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், விவேக்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது தொழில் முறை வாழ்க்கை மூலம் நம்மை சிரிக்கவைத்தார். அவரது மறைவு நமக்குப் பெரும் இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், RIP Vivek Sir! உங்களைத் திரையில் பார்க்கும் போதெல்லாம் உங்களுடன் பழகி இருப்பதைப் போல உணரவைக்கும். இது உண்மையிலேயே இதயத்தை உடைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விவேக்கின் இறப்புச் செய்தி கேட்டு என் இதயம் வேதனையடைகிறது. விவேக் நீங்கள் மிக விரைவில் சென்றுவிட்டீர்கள். நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details