தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இவரது இயற்பெயர் மிஸ்ரா அப்பாஸ் அலி. இவர், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
கடந்த 90களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. அப்போது இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும், சாக்லேட் பாயாகவும் இருந்தார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். காலப்போக்கில் படவாய்ப்பு குறையவே விளம்பரங்கள், சீரியல்கள் நடித்தார்.