’வைகைப்புயல்’ வடிவேலு தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாவர். கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவருடைய படம், நகைச்சுவைக் காட்சிகள் அல்லாத மீம்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
வ்டிவேலு தன் திரைப்பயணத்தில் பல படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்திருந்தாலும், ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்.
2006ஆம் ஆண்டும் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தில் இளவரசு, நாசர், மனோரமா, ஸ்ரீமன் மோனிகா, தேஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசை அமைத்திருந்தனர்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து2017ஆம் ஆண்டுஇப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், தயாரிப்பாளர் சங்கர் இருவரும் முடிவு செய்தனர்.
பூதாகரமாக வெடித்த சங்கர்- வடிவேலு பிரச்னை
இப்படத்திற்க்கு ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து வடிவேலுவையே மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர்.
ஆனால் படம் தொடங்கிய சில நாள்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.