அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதிலும் குறிப்பாக மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று யூ-ட்யூபில் சாதனைப் படைத்தது. இந்நிலையில் ’வலிமை’ படத்தின் டீசர் விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.