இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும், 'தளபதி 65’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஜார்ஜியாவில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் விஜய்யின் 65ஆவது படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று உலாவருகிறது. அதன்படி படத்திற்கு 'டார்கெட்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.