தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி எப்போது கலந்துகொள்கிறார்? - latest kollywood news

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி
ரஜினி

By

Published : Dec 7, 2020, 9:54 AM IST

'தர்பார்' திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.

'அண்ணாத்த' படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் அதில் ரஜினி கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையில் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து சமீபத்தில் அறிவித்தார். மேலும் தான் நடித்துவரும், 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 விழுக்காடு மீதம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தின் 40 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க வரும் 15ஆம் தேதி ஹைதராபாத் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கிவரும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. மேலும் இத்திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details