சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினியின் காட்சிகள் முடிந்த நிலையில், அவர் விரைவில் சென்னை திரும்பவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாவ்...ரஜினியுடன் இணையும் தனுஷ்? - rajini latest movies
சென்னை: நடிகர் ரஜினி கடைசியாக தனது மருமகன் இயக்கும் படத்தில் நடித்துவிட்டு ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியுடன் இணையும் தனுஷ்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருபடம் இயக்குநர் சிவாவுக்கும், இன்னொரு படத்தை அவரது மருமகன் தனுஷிற்கும் கொடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போது தனுஷ் ஆங்கில படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு ரஜினியின் கடைசி படத்திற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.