'துருவங்கள் பதினாறு' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'நரகாசூரன்'. நீண்ட நாள்களாக வெளியிடப்படாமல் இழுபறியில் இருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஓடிடியில் வெளியாகும் 'நரகாசூரன்' திரைப்படம்? - latest kollywood news
சென்னை: 'நரகாசூரன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
naragasooran
இந்தப் படத்தை ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட், ஒன்ராகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படம் சில சிக்கல் காரணமாக இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், 'நரகாசூரன்' திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.