தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜனவரியில் வெளியாகிறதா மாஸ்டர் ட்ரெய்லர்? - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

’மாஸ்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

மாஸ்டர்
மாஸ்டர்

By

Published : Dec 6, 2020, 1:47 PM IST

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நடந்துமுடிந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகும் தேதி தாமதமாகியுள்ளது. இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் டீசர் வெளியான சில மணி நேரங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்து, டீசரை ட்ரெண்ட் செய்த நிலையில், தற்போது ட்ரெய்லரை, ட்ரெண்ட் செய்ய விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:’பூ’ திரைப்படம் குறித்து நினைவுகூர்ந்த பார்வதி: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details