நடிகர்கள் ஆர்யா-விஷால் இணைந்து நடித்துள்ள படம், ‘எனிமி’. இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதியில் படமாக்கப்பட்டது.
‘எனிமி’ படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் 20ஆம் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:துறுதுறு நடிகர் நகுலுக்குப் பிறந்தநாள்- குவியும் வாழ்த்துகள்