தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் பார்டர்? - latest kollywood news

சென்னை: நடிகர் அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர்
பார்டர்

By

Published : Jun 16, 2021, 1:45 PM IST

’குற்றம் 23’ திரைப்படத்திற்குப் பிறகு அருண் விஜய் - அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘பார்டர்’. இதில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ஆல்இன்அல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகியுள்ளது. சென்னை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.

இந்நிலையில் ‘பார்டர்’ திரைப்படம்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:5ஆவது முறையாக பிரபல இயக்குநருடன் கூட்டணி அமைத்த மக்கள் செல்வன்

ABOUT THE AUTHOR

...view details