நடிகர் கமல்ஹாசனின் 232ஆவது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் ’கைதி’ , ’மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தில் மலையாள நடிகர் பகத்பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.