தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

biggboss 5 - என்னது கமலுக்கு பதில் இவர் தானா? - பிக்பாஸ் தொகுப்பாளர்

கமல் ஹாசனுக்கு (kamal Haasan ) பதிலாக அவரது மகள் இந்த வாரம் பிக்பாஸ் (biggboss anchor) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

biggboss
biggboss

By

Published : Nov 23, 2021, 1:25 PM IST

நடிகர் கமல் ஹாசன் (kamal Haasan ) காதி துணிகளை அறிமுகம் செய்வதற்காகச் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். கமல் ஹாசனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் யார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். அல்லது நிகழ்ச்சி வழக்கமாக வார நாள்களில் செல்வதுபோல் நகருமா என்ற சந்தேகம் மக்கள் மனத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் இறுதியில் கமல் ஹாசனுக்குப் பதிலாக அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து (biggboss anchor) வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இதேபோன்று தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாகார்ஜுனா கலந்துகொள்ளாத இரண்டு வாரங்களை சமந்தா (அப்போதைய மருமகள்) தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடந்தவை, நடப்பவையை கூறினார் - உலக நாயகனை விசாரித்த வைரமுத்து

ABOUT THE AUTHOR

...view details