தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்! - ஹூட் செயலி

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, தான் புதிதாக தொடங்கியிருக்கும் 'ஹூட்' எனும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலி குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி, வாழ்த்துகளை பெற்றுள்ளார்.

v
v

By

Published : Oct 27, 2021, 1:16 PM IST

எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கருத்துகளை, தங்கள் குரல் வழியே பதிவிட உதவும் 'ஹூட்' எனும் செயலியை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா உருவாக்கியுள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் இருந்தபடியே அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான தனது முதல் குரல் பதிவுடன் இந்தச் செயலியை அறிமுகம் செய்தார்.

வருங்காலத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போல, இந்தச் செயலி பிரபலமடைய வாழ்த்துவதாகவும் தனது குரல் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் 'ஹூட்' வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், 'ஹூட்' செயலியின் பயன்பாடுகளை விவரித்துள்ளார்.

அதன் பின் இந்த செயலி பிரபலமடைய ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details