பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஒரு காலத்தில் வடசென்னையில் மிகவும் பிரபலமாக இருந்த விளையாட்டான குத்துச்சண்டையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இதில், பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்ளிடோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணியில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டனர்.