இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகை ரெஜினா நாயகியாக நடித்திருக்கும் படம், 'சூர்ப்பனகை'. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. நாயகியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் அகழ்வாராய்ச்சி ஆய்வாளராக ரெஜினா நடித்திருக்கிறார்.
கடந்த காலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்திற்கும், நாயகிக்கும் தொடர்பு இருக்கிறது. அதன் பின்னணி என்ன? எதனால் கொலைகள் நடைபெறுகிறது என்பது தான் படத்தின் கதை.
இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், "சூர்ப்பனகை படத்தில் இடம்பெற்றுள்ள பரபரப்பான காட்சிகள், திகில், நகைச்சுவையால் பார்வையாளர்களுக்கு ஒருபுதுவிதமான அனுபவத்தைத் திரையரங்கில் ஏற்படுத்தும். பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.