தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரெஜினாவின் 'சூர்ப்பனகை' படப்பிடிப்பு நிறைவு! - Soorpanagai release date

நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள, ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூர்ப்பனகை
சூர்ப்பனகை

By

Published : Aug 18, 2021, 1:11 PM IST

'திருடன் போலீஸ்', 'உள்குத்து' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. நடிகை ரெஜினா நாயகி்யாக நடித்திருக்கும் இப்படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

'சூர்ப்பனகை' எனப் பெயரிட்டுள்ள இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக படத்தின் இயக்குநர் தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சூர்ப்பனகை படத்தின் முழுப் படப்பிடிப்பும் இனிமையாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும். 'சூர்ப்பனகை' படத்தில் இடம்பெற்றுள்ள பரபரப்பான காட்சிகள், திகில், நகைச்சுவையால் பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தை திரையரங்கில் ஏற்படுத்தும். ராஜசேகர் வர்மா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா இதில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். அக்‌ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ABOUT THE AUTHOR

...view details