தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சைமா 2021 - 7 விருதுகளை வென்ற சூரரைப் போற்று - siima awards

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் சைமாவில் 7 விருதுகளை வென்று குவித்துள்ளது.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

By

Published : Sep 20, 2021, 10:42 AM IST

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என அழைக்கப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது. தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப். 19) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

சூரரைப் போற்று குழு

இதில் தென்னிந்திய மொழி படப் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் சைமாவில் ஏழு விருதுகளை வென்று குவித்துள்ளது.

சிறந்த நடிகர் - சூர்யா

சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி

சிறந்த இயக்குநர்- சுதா கொங்கரா

சிறந்த திரைப்பட விருது- சூரரைப் போற்று

சிறந்த தயாரிப்பாளர்- ராஜசேகரன்

சிறந்த இசையமைப்பாளர்- ஜி.வி. பிரகாஷ்

சிறந்த ஒளிப்பதிவாளர்- நிகேத் பொம்மிரெட்டி

ஆகிய பிரிவுகளின்கீழ் 'சூரரைப் போற்று' படம் விருதுகள் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம், ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெற்றோருக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்காதீர்கள் - சூர்யா உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details