நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா முரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்துள்ளனர்.
’சூரரைப் போற்று’ அப்டேட் - மாலை 4 மணி; சூர்யா ரசிகர்கள் ஆர் யூ ரெடி! - Actor suriya latest movies
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா சூழல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'சூரரைப் போற்று' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.